Friday, July 19, 2024
Homeசினிமா11 வருடங்கள் கழித்து வெளிவரவிருக்கும் மத கஜ ராஜா திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

11 வருடங்கள் கழித்து வெளிவரவிருக்கும் மத கஜ ராஜா திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்


சுந்தர் சி

தமிழ் சினிமாவில் முக்கியமான முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இயக்குனர் மட்டுமின்றி நடிகராகவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.



இவர் இயக்கி நடித்து சமீபத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளிவந்தது. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து 2024ஆம் ஆண்டில் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையை படைத்தது.



அரண்மனை 4 திரைப்படத்தை தொடர்ந்து கலகலப்பு 3 படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருடைய இயக்கத்தில் உருவான மற்றொரு திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மத கஜ ராஜா


பல ஆண்டுகளுக்கு முன் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் மற்றும் சந்தானம் இணைந்து நடித்து உருவான திரைப்படம் மத கஜ ராஜா. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்டோர் விஷால் உடன் நடித்திருந்தனர்.

11 வருடங்கள் கழித்து வெளிவரவிருக்கும் மத கஜ ராஜா திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | Madha Gaja Raja Going Release After 11 Years



சில காரணங்களால் இப்படம் இதுவரை வெளிவராமல் இருந்த நிலையில், 11 ஆண்டுகள் கழித்து இப்படத்தை வெளியிட்ட முடிவு செய்துள்ளார்களாம். வருகிற ஆகஸ்ட் மாதம் மத கஜ ராஜா படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments