Monday, March 17, 2025
Homeசினிமா12 ஆண்டுகளை சினிமாவில் கடந்த நடிகை பூஜா ஹெக்டே பேச்சு..

12 ஆண்டுகளை சினிமாவில் கடந்த நடிகை பூஜா ஹெக்டே பேச்சு..


பூஜா ஹெக்டே

தமிழில் வெளிவந்த முகமூடி படம்தான் நடிகை பூஜா ஹெக்டேவின் அறிமுக திரைப்படமாகும். ஆனால், இப்படம் சரியாக போகாத காரணத்தினால் தமிழில் இருந்து தெலுங்கிற்கு சென்ற பூஜாவிற்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் முக்கிய நடிகையாக வலம் வந்தார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை பூஜா ஹெக்டே, தற்போது சினிமாவில் 12 ஆண்டுகளை கடந்துள்ளார்.

முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தற்போது தளபதி விஜய்யுடன் ஜனநாயகன், சூர்யாவுடன் ரெட்ரோ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ஹிந்தியில் இவர் நடித்துள்ள தேவா திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது.  

12 வருட சினிமா பயணம்

இந்த நிலையில், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பூஜா ஹெக்டேவிற்கு சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் 12 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ளது குறித்து நடிகை பூஜா ஹெக்டே மனம் திறந்து பேசியுள்ளார்.

இதில் “12 வருட சினிமா பயணம் எனக்கு ரோலர் கோஸ்டரில் சவாரி செய்தது போல் இருந்தது. அதில் வரும் ஏற்றம், இறக்கம், சரிவு போல், பல வெற்றிகளையும் தோல்விகளையும், உயர்வையும் தாழ்வையும் பாத்திருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments