கல்கி 2898 AD
பிரபாஸ் மற்றும் நாக் அஸ்வின் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைத்துள்ள திரைப்படம் கல்கி 2898 AD.
இப்படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் வித்தியாசமான தோற்றத்தில் வில்லனாக நடித்திருந்தார். சில நிமிடங்கள் வந்தாலும் ரசிகர்களை கவர்ந்தார். இரண்டாம் பாகத்தில் படம் முழுக்க வில்லனாக மிரட்டுவார் என கூறப்படுகிறது.
மேலும் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் ஹீரோவை விட வலுவாக இருந்தது. அதே போல் தீபிகா படுகோன், ஷோபனா, பசுபதி உள்ளிட்டோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை கவர்ந்தது.
வசூல்
இந்த நிலையில், கல்கி 2898 AD திரைப்படம் வெளிவந்து 12 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 860 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதே போல் தமிழகத்தில் ரூ. 37 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என நமக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆனால், படக்குழு 11 நாட்களிலேயே கல்கி 2898 AD திரைப்படம் உலகளவில் ரூ. 900 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டதாக அறிவித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.