லப்பர் பந்து
லப்பர் பந்து, தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியான ஹிட் படங்களில் ஒன்று.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும்.
அறிமுய இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ்
ரசிகர்களை தாண்டி பிரபலங்களாலும் பாராட்டுக்களை பெற்று வரும் லப்பர் பந்து படக்குழுவினர் மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்திற் சென்று மரியாதை செலுத்தினார்கள்.
பின் இளையராஜா படத்தில் அவரது பாடலை பயன்படுத்த அனுமதி அளித்ததற்கு நன்றி கூறியிருந்தனர்.
நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து படம் 12 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 22 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளனர்.