லப்பர் பந்து
சமீபத்தில் வெளிவந்து சென்சேஷனல் ஹிட்டாகியுள்ள திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கியுள்ளார். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளார்.
இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் சுவாசிகா, சஞ்சனா, பால சரவணன், காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் இதுவரை 13 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
வசூல்
இந்த நிலையில் 13 நாட்களில் உலகளவில் லப்பர் பந்து திரைப்படம் ரூ. 23 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூலாக பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் லப்பர் பந்து திரைப்படத்திற்கு எந்த அளவிற்கு வசூல் கிடைக்கப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.