நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் அஜித்தின் திரைப்பயணத்தின் இடையில் என்ன படம் நடித்தாலும் ஒடாமல் இருந்தது.
அந்த நேரத்தில் அவரது திரைப்பயணத்தை தூக்கிவிடும் வகையில் அமைந்த படம் தான் பில்லா. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்-நயன்தாரா நடித்த இப்படம் அருமையான விமர்சனங்களை பெற்றதோடு மாபெரும் வசூல் வேட்டையும் நடத்தியது.
அதோடு படத்தில் அமைந்த பாடல்கள் இப்போதும் ஹிட் தான். 2007ம் ஆண்டு முதல் பாகம் வெளியாக 2012ம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியானது.
ஆனால் 2ம் பாகம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தரவில்லை என்று தான் கூற வேண்டும். இதில் இடம்பெற்ற ஸ்டண்ட் காட்சிகள் இன்று வரை எந்த நடிகரும் செய்யாத ஒரு விஷயமாக உள்ளது.
வசூல் விவரம்
பில்லா 2 படத்தை சக்ரி டோலெடி இயக்க அஜித், வித்யூ ஜம்வால், பார்வதி ஓமனக்குட்டன், ப்ருனா அப்துல்லா, யோக் ஜபி என பலர் நடித்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார்.
இன்றோடு 13 வருடங்களை படம் எட்டியுள்ள நிலையில் படத்தின் வசூல் விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. படம் மொத்தமாக ரூ. 62 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.