பிரபலங்களின் சந்தோஷ செய்தி ரசிகர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறதோ அதை விட சோகமான விஷயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.
அப்படி நேற்று பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி செய்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் பிரபல நடிகை விமான நிலையத்தில் கைதான தகவல் வெளியாகியுள்ளது.
யார் அவர்
மாணிக்யா என்ற கன்னட படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரன்யா. கர்நாடகாவில் பணியாற்றும் டிஜிபி தரவரிசை ஐபிஎஸ் அதிகாரியின் மகள் இவர். இவர் அடிக்கடி துபாய் என பயணம் செய்து வந்ததால் டிஆர்ஐ கண்காணிப்பில் இருந்தார்.
அவர் தங்கத்தை கடத்திச் செல்வதாக தகவல் வர விமான நிலையம் வந்த அவரது உடமைகளை பரிசோதனை செய்தபோது அதில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
ரன்யாவை கைது செய்து பெங்களூரில் உள்ள டிஆர்ஐ தலைமையகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின் நேற்று அவரை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.