நடிகர் தனுஷ் கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் ரஜினி மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அவர்கள் சட்டப்படி விவாகரத்து பெறவும் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
ரஜினியின் வீடு சென்னை போயஸ் கார்டனில் இருக்கிறது என எல்லோருக்கும் தெரியும். விவாகரத்துக்கு பிறகு தனுஷும் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக புது வீட்டை கட்டி குடியேறி இருக்கிறார்.
16 வயதில் வந்த ஆசை..
தனுஷ் தற்போது ராயன் படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். அந்த படத்தின் விழாவில் பேசிய தனுஷ் தான் ஏன் போயஸ் கார்டனில் வீடு கட்டினேன் என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
16 வயதில் போயஸ் கார்டனில் ரஜினி வீட்டு காவலர்களிடம் கெஞ்சி ரஜினியின் வீட்டை பார்த்தாராம் தனுஷ். அருகில் ஜெயலலிதா வீடும் இருந்ததாம்.
“அப்போது அங்கு வீடு கட்ட வேண்டும் என எனக்கு ஆசை வந்தது. அப்போது விழுந்தது விதை” என தனுஷ் கூறி இருக்கிறார்.