வேட்டையன்
ஜெய் பீம் என்ற வெற்றிப்படம் கொடுத்த ஞானவேலுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வைத்து படம் இயக்குவது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை வேட்டையன் என்ற படத்தை இயக்கி தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் ஞானவேல்.
ரஜினியை தொடர்ந்து இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பலர் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்திருந்தார்.
பட வசூல்
கடந்த அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திவரும் நிலையில் மொத்தமாக 19 நாள் முடிவில் படம் ரூ. 225 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம்.
எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் இல்லை, தீபாவளி எல்லாம் வருகிறது, கண்டிப்பாக படம் பெரிய அளவில் வசூலிக்கும் என கூறப்படுகிறது.