பேபி ஜான்
அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய வெற்றிப் படங்களில் ஒன்று தெறி.
செம மாஸ் ஹிட்டடித்த இப்படத்தை ஹிந்தியில் தயாரித்திருக்கிறார் அட்லீ. கலீஸ் இயக்கத்தில் தமன் இசையமைக்க வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக கடந்த டிசம்பர் 25ம் தேதி பேபி ஜான் படம் வெளியாகி இருந்தது.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் ரூ. 11 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ள இப்படம் 2வது நாளில் சுத்தமாக குறைந்து ரூ. 3.90 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது.
டிக்கெட் புக்கிங் முதல் வசூல் வரை பேபி ஜான் படத்திற்கு 3வது நாள் முதல் சுத்தமாக குறைந்துள்ளது. இப்படியே போனால் படத்தின் வசூல் நஷ்டத்தில் முடியும் என கூறப்படுகிறது.