பிரபல நடிகர்
என்னு நிண்டே மொய்தீன், சார்லி, கப்பி, மின்னல் முரளி, 2018 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவை தாண்டி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகரானார் டோவினோ தாமஸ்.
ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரம் தொடங்கி துணை வேடம், நகைச்சுவை நடிகர், வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
தமிழிலும் சில குறிப்பிட்ட படங்களில் நடித்துள்ள இவரது நடிப்பில் அண்மையில் Identity படம் வெளியாகி செம வசூல் வேட்டை நடத்தியது.
புதிய கார்
படம் வெற்றியடைந்துள்ள நிலையில் டோவினோ தாமஸ் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
நடிகர் டோவினோ தாமஸ் வாங்கியிருப்பது Land Rover Range Rover Autobiography SUV கார், இதன்விலை ரூ. 2.60 கோடி என கூறப்படுகிறது.