இசையமைப்பாளர் டி.இமானுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக கிராமத்து பின்னணியில் உருவாகும் படங்களுக்கு அவர் போடும் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகின்றன.
20 வருடங்களாக சினிமாவில் இருந்து வரும் தனக்கு ஒரு மோசமான விஷயம் நடந்து இருப்பதாக அவர் தற்போது தெரிவித்து இருக்கிறார்.
ஹேக் செய்யப்பட்ட X கணக்கு
தனது X (ட்விட்டர் ) கணக்கு சிலரால் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்றும், அதை தன்னால் மீட்க முடியவில்லை என இமான் கூறி இருக்கிறார்.
20 வருடங்களாக இசை துறையில் இருக்கும் எனக்கு ரசிகர்கள் உடனான பிணைப்பு மிக மிக முக்கியமானது. என் கணக்கில் ஹேக்கர் பதிவிடும் பதிவுகள் என்னுடையது அல்ல. அந்த பதிவுகள் மற்றும் மெசேஜ்களை புறக்கணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என இமான் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.