தமிழ் சினிமா 2024
2024ஆம் ஆண்டின் 6 மாதங்கள் நிறைவுபெற்ற நிலையில், இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்து ஹிட்டான திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் மலையாள திரைப்படங்களின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் இருந்தது. ஆனால், அரண்மனை 4, கருடன், மகாராஜா ஆகிய படங்களால் தமிழ் சினிமா 2024ஆம் ஆண்டில் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த 6 மாதங்களில் தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரூ. 100 கோடிக்கும் மேல் இரண்டு திரைப்படங்கள் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் கடந்துள்ள 6 மாதங்களில் தமிழ் சினிமாவில் இருந்து வெளிவந்து ஹிட்டான திரைப்படங்கள் என்னென்ன என்று வரிசையாக பார்க்கலாம்..
சூப்பர்ஹிட் படங்களின் லிஸ்ட்
-
ப்ளூ ஸ்டார் - வடக்குப்பட்டி ராமசாமி
- லவ்வர்
- அரண்மனை 4
- ஸ்டார்
- கருடன்
- மகாராஜா