Sunday, March 30, 2025
Homeஇலங்கை2025 இன் முதல் இரண்டு மாதங்களில் ஏற்றுமதியில் வளர்ச்சி

2025 இன் முதல் இரண்டு மாதங்களில் ஏற்றுமதியில் வளர்ச்சி


2025 பெப்ரவரி மாதத்தில் மொத்த ஏற்றுமதி, பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து 1,382.53 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இது 2024 பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 4.62% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. மேலும், 2025 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பெப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 2.58மூ மாதாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தற்காலிக தரவுகள் மற்றும் இரத்தினக் கற்கள், நகைகள் மற்றும் கனிம எண்ணெய்ப் பொருட்கள் ஆகியவற்றிற்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 2025 பெப்ரவரி மாதத்தில் பொருட்களின் ஏற்றுமதியின் மதிப்பு 1,056.39 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

2025 பெப்ரவரி மாதத்தில் சேவைகளின் ஏற்றுமதி 326.14 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 இன் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 24.37% வளர்ச்சியைக் காட்டுகிறது.

இருப்பினும், பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து மொத்த ஏற்றுமதி 2025 ஜனவரி முதல் பெப்ரவரி வரையிலான காலத்திற்கு 2,730.33 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 இல் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 6.65மூ வளர்ச்சியைக் காட்டுகிறது.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவுகள் மற்றும் இரத்தினக் கற்கள், நகைகள் மற்றும் கனிம எண்ணெய்ப் பொருட்கள் ஆகியவற்றிற்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2025 இன் முதல் இரண்டு மாதங்களில் பொருட்களின் ஏற்றுமதி 3.9% அதிகரித்து 2,109.19 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சேவைகளின் ஏற்றுமதியின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 17.2% அதிகரித்து 621.14 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments