நிகில் முருகன்
தமிழ் சினிமாவில் உள்ள PRO-களில் முக்கியமான ஒருவர் நிகில் முருகன். திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வேகமாகவும், வீச்சுடனும் செய்து, அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்.
இவர் கடந்த 28 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பணிபுரிந்து வருகிறார். 555 படங்களில் பணிபுரிந்துள்ள இவர் பவுடர் எனும் படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இதில் 555வது திரைப்படம் தான் தளபதி விஜய்யின் கோட் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வரிடம் இருந்து கிடைத்த வாழ்த்து
இந்த நிலையில், இன்றுடன் நிகில் முருகன் சினிமாவில் காலாடி எடுத்துவைத்து 28 ஆண்டுகள் பூர்த்தி செய்ததை முன்னிட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
அந்த மகிழ்ச்சியான தருணத்தில் எடுத்த புகைப்படம் இதோ..