நடிகர் பாலா
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பாலா.
அன்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து காதல் கிசு கிசு, கலிங்கா, தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரான இவர் அவர் இயக்கிய வீரம், அண்ணாத்த போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
திருமணம்
கடந்த 2010ம் ஆண்டு பின்னணி பாடகி அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்தார் பாலா, இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளனர். ஆனால் சில பிரச்சனைகளால் இவர்கள் 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பின் 2021ம் ஆண்டு மருத்துவரான எலிசபெத் என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டனர் அவரையும் பிரிந்தார்.
இடையில் பாலாவின் முதல் மனைவி, தனது முன்னாள் கணவர் தன்னையும், மகளையும் மிரட்டுவதாக புகார் அளிக்க கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள பாலா, இன்று (அக்டோபர் 23) தனது உறவினரான கோகிலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கேரளாவில் உள்ள லூரில் உள்ள பாவகுளம் மகாதேவர் கோவிலில் நடந்தது.