கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்து அனைவருடைய மனதிலும் நீங்கா இடத்தை பிடித்த திரைப்படம் 96. இப்படத்தில் விஜய் சேதுபதி – திரிஷா காம்போ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மெய்யழகன்
இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கினார் இயக்குனர் பிரேம் குமார். இவர் இயக்கத்தில் 6 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ள திரைப்படம் தான் மெய்யழகன்.
இப்படத்தில் கார்த்தி – அரவிந்த் சாமி இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மனித உணர்வுகளை குறித்து பேசிய இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சிலர் இப்படத்திற்கு நெகேட்டிவ் விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
வசூல்
இந்த நிலையில், 3 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள மெய்யழகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.