வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படம் வெளிவந்த அன்றில் இருந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை வெறித்தனமாக நடக்கும்.
ஜெயிலர் படம் உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்த நிலையில், அதன்பின் வெளிவந்த வேட்டையன் வசூலில் ஜெயிலர் படத்தை விட மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 10ஆம் தேதி வெளியான வேட்டையன் படத்தை பிரபல இயக்குனர் TJ ஞானவேல் இயக்க, லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா, பகத் பாசில் என பலரும் நடித்துள்ளனர்.
வசூல்
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வேட்டையன் படம் பாக்ஸ் ஆபிஸில் மூன்று நாட்களை கடந்துள்ளது. இந்த நிலையில், மூன்று நாட்களில் வேட்டையன் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உலகளவில் வேட்டையன் படம் 3 நாட்களில் ரூ. 158 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தெரிவிக்கின்றனர். இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.