Bloody Beggar
நடிகர் கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய ஹீரோக்களில் ஒருவர். தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
லிப்ட், டாடா ஆகிய படங்களின் வெற்றி இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டாட வைத்துள்ளது. ஸ்டார் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அதை தொடர்ந்து வெளிவந்துள்ள Bloody Beggar திரைப்படமும் மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்று தான சொல்லவேண்டும்.
வசூல்
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சிவபாலன் இயக்கத்தில் இப்படம் உருவானது. மேலும் இப்படத்தில் கவினுடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லி, சுனில் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், 3 நாட்களில் Bloody Beggar படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 6.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.