தங்கலான்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த 15ஆம் தேதி திரைக்கு வந்த படம் தங்கலான்.
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கிய இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரிக்க, முன்னணி இசையமைப்பாளர். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றது.
படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் மக்கள் மத்தியில் இருந்தாலும் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என அனைவருடைய நடிப்பும் மிரட்டலாக இருந்தது என கூறப்படுகிறது. அதே போல் ஜி. வி. பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு மாபெரும் பலமாக அமைந்துள்ளது.
வசூல்
இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் மட்டுமே ரூ. 40 கோடி என சொல்லப்படுகிறது. இனி வரும் நாட்களில் இப்படம் எந்த அளவிற்கு வசூல் செய்யும் என பொறுத்திருந்து பார்ப்போம்.