கிரிக்கெட் வீரர்கள் படங்களில் நடிப்பது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஹர்பஜன் சிங், இர்பான் பதான் தொடங்கி ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் படங்களில் நடித்து இருக்கின்றனர்.
தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெலுங்கு படமான ராபின்ஹூட் படத்தில் சின்ன கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.
சம்பளம்
அவர் படத்தில் வருவதே 3 நிமிடங்கள் தான். ஷூட்டிங்கில் சில தினங்கள் மட்டுமே அவர் பங்கேற்று இருக்கிறார். ஆனால் அதற்காக வாங்கிய சம்பளம் தான் எல்லோருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.
படத்தில் நடிக்க 2.5 கோடி ரூபாய், மற்றும் ப்ரோமோஷனுக்கு 1 கோடி ரூபாய் என மொத்தம் 3.5 கோடி ரூபாய் அவர் சம்பளமாக பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வருட ஐபிஎல்-லில் எந்த அணியும் டேவிட் வார்னரை ஏலம் எடுக்கவில்லை, இருப்பினும் அவர் அதை விட அதிகம் படத்தில் சம்பாதித்து இருக்கிறார் என பலரும் ஆச்சர்யம் தெரிவித்து இருக்கின்றனர்.