அமரன்
அமரன் படம் 2024ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமும் தற்போது அமரன் தான்.
இந்த நிலையில், அமரன் படம் 30 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க. முதலில் நாளில் துவங்கி ஒவ்வொரு நாளும் அமரன் படம் தொடர்ந்து பல வசூல் சாதனைகளை படைத்தது.
30 நாட்களில் செய்த வசூல்
3 நாட்களில் ரூ. 100 கோடி வசூல், 10 நாட்களில் ரூ. 200 கோடி வசூல் என, இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த எந்த படமும் செய்யமுடியாத வசூலை இப்படம் செய்துள்ளது.
இந்த நிலையில், ரூ. 300 கோடியை கடந்தும் கூட வசூல் வேட்டையாடி வரும் அமரன் 30 நாட்களில் செய்துள்ள வசூல் ரூ. 325 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு தமிழில் வெளிவந்து அதிக வசூல் செய்த திரைப்படங்களில் பட்டியலில் கோட் முதலிடத்தில் இருக்க, அமரன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.