அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதில் விடாமுயற்சியின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், விடாமுயற்சி படத்தை முழுமையாக முடித்துவிட்டு, குட் பேட் அக்லி படப்பிடிப்பில் இணையவுள்ளார் அஜித்.
இப்படத்தை முடித்தபின் அறுவை சிகிச்சை செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் ஒரு ஆண்டு ஓய்வு எடுக்கப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இதுகுறித்து எந்த ஒரு தகவலும் அஜித் தரப்பில் இருந்து வெளிவரவில்லை.
32 ஆண்டுகள்
இந்த நிலையில், இன்றுடன் நடிகர் அஜித் சினிமாவில் என்ட்ரி ஆகி 32 ஆண்டுகள் ஆகியுள்ளதால் அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இன்று விடாமுயற்சி மற்றும் குட் பெட் அக்லி படங்களின் அப்டேட் வெளியாகும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
32 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் அஜித் பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில், அஜித் நடித்து வெளிவந்து மாபெரும் அளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்த திரைப்படங்களின் விவரங்கள் குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
-
துணிவு – ரூ. 210+ கோடி -
விஸ்வாசம் – ரூ. 190+ கோடி -
வலிமை – ரூ. 170+ கோடி -
விவேகம் – ரூ. 128 கோடி -
வேதாளம் – ரூ. 125 கோடி -
நேர்கொண்ட பார்வை – ரூ. 103 கோடி -
ஆரம்பம் – ரூ. 101 கோடி -
என்னை அறிந்தால் – ரூ. 95 கோடி -
வீரம் – ரூ. 88 கோடி -
மங்காத்தா – ரூ. 83 கோடி -
பில்லா – ரூ. 51 கோடி -
வரலாறு – ரூ. 40 கோடி -
வில்லன் – ரூ. 33 கோடி -
அட்டகாசம் – ரூ. 30+ கோடி -
தீனா – ரூ. 25+ கோடி -
வாலி – ரூ. 20+ கோடி -
அமர்க்களம் – ரூ. 20+ கோடி -
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் – ரூ. 20+ கோடி