சினிமா துறையில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் பல பிரபலங்களும் போதை வழக்கில் சிக்கி வருகின்றனர்.
தற்போது நடிகை ராகுல் ப்ரீத்தின் தம்பி அமன் சிங் கைதாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
போதைப் பொருள்
கோகைன் போதைப்பொருளுடன் ஐந்து பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அவர்கள் அளித்த தகவலின்படி அவர்களிடம் தொடர்ந்து போதைப்பொருள் வாங்கும் நபர்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றனர்.
அப்போது ராகுல் ப்ரீத்தின் தம்பி அமன் ப்ரீத் சிங் போதை பொருள் அவர்களிடம் வாங்கி வந்தது தெரிய வந்து இருக்கிறது. அவரையும் மற்ற 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கொகைன் கைப்பற்றப்பட்டு இருகிறதாம். அதன மதிப்பு 35 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
மெடிக்கல் டெஸ்ட்டில் அமீன் ப்ரீத் சிங் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகி இருக்கிறது.