புஷ்பா 2 படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து வருகிறது. 4 நாட்களில் 800 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்து சாதனை படைத்து இருக்கிறது.
முதல் மூன்று நாட்களை விட நான்காம் நாள் வசூல் மிகவும் அதிகரித்து இருக்கிறது. 4 நாட்களில் மொத்தம் 829 கோடி வசூல் வந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
4ம் நாள் அதிக வசூல்
ஹிந்தியில் முதல் நாளில் 79 கோடி, இரண்டாம் நாள் 59 கோடி, மூன்றாம் நாள் 74 கோடி வசூலித்து இருந்தது புஷ்பா 2.
நான்காம் நாள் இதை எல்லாம் விட மிக அதிகமாக 86 கோடி ரூபாய் நெட் வசூல் பெற்று புது சாதனை படைத்து இருக்கிறது புஷ்பா 2.