வனிதா விஜயகுமார்
நடிகை வனிதா விஜயகுமார், தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்தோடு நாயகியாக அறிமுகமானவர்.
சில படங்களே நாயகியாக நடித்தவர் அதன்பின் சினிமா பக்கம் காணவில்லை. அதன்பின் பல வருடங்களுக்கு பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் நிறைய பிரச்சனைகளை சந்தித்தார், வெளியே வந்த பிறகும் பிரச்சனைகள் அவரை தொடர்ந்தது. இப்போது நடிப்பு, பிசினஸ் என பிஸியாக இருந்தாலும் தனக்கான நேரத்தையும் கொண்டாடி வருகிறார்.
திருமணம்
நடிகை வனிதா விஜயகுமாரின் திருமண வாழ்க்கை குறித்து அனைவருக்கும் தெரிந்தது தான்.
3 முறை திருமணம் செய்து அது எதுவுமே அவருக்கு சரியாக அமையவில்லை. இப்போது ரசிகர்கள் அவரிடம் அதிகம் உங்களது 4வது திருமணம் எப்போது என்று தான் கேட்கிறார்கள்.
அப்படி அவரிடம் ரசிகர் ஒருவர் திருமணம் பற்றி கேட்க, அதற்கு அவர் எதிர்ப்பாராததை எதிர்ப்பாருங்கள் என கூறியிருக்கிறார்.