வேட்டையன்
கடந்த வாரம் வெளிவந்து வசூலில் வேட்டையாடி வரும் திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன். TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான இப்படத்தை லைகா தயாரிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பல ஆண்டுகள் கழித்து பாலிவுட் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். மேலும் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில், ராணா ஆகியோர் முதல் முறையாக ரஜினியுடன் கைகோர்த்துள்ளனர்.
சமூகத்திற்கு தேவையான கருத்தை பேசிய இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
வசூல்
இந்த நிலையில் 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள வேட்டையன் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, வேட்டையன் படம் 4 நாட்களில் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் வாரத்தின் இறுதியில் இப்படம் ரூ. 200 கோடியை கடந்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் என்னென்ன சாதனைகளை படைக்கபோகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.