Thursday, December 26, 2024
Homeசினிமா4 மணி நேரமாக தவித்துக் கொண்டிருந்தேன்..கோபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு

4 மணி நேரமாக தவித்துக் கொண்டிருந்தேன்..கோபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு


ஸ்ருதி ஹாசன்

உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து, பல படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஜோடியாக ஒரு பாடலில் நடித்து இருந்த நிலையில், லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படத்தில் ஸ்ருதி நடித்து வருகிறார்.

வெளியிட்ட அதிர்ச்சி பதிவு 

இந்நிலையில், மும்பையில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் 4 மணி நேரம் தாமதமானதாகவும், ஆனால், இது குறித்து பயணிப்பவர்களுக்கு எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் பொறுமை இழந்து ஸ்ருதி ஹாசன் அவர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

4 மணி நேரமாக தவித்துக் கொண்டிருந்தேன்..கோபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு | Shruti Haasan Tweet Went Viral

அதில், “நான் சாதாரணமாக ஒரு விஷயத்திற்கு குறை சொல்லும் நபர் கிடையாது. ஆனால் இண்டிகோ நிறுவனத்தினர் இன்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர்.

கடந்த 4 மணி நேரமாக எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் பயணிகளுக்கு உதவ முன்வருவீர்களா?” என்று பதிவிட்டுள்ளார்.



அதற்கு பதிலளித்த இண்டிகோ விமான நிறுவனம் அதில், “தாமதத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். மும்பையில் மோசமான வானிலை நிலவி வருவதால் விமான போக்குவரத்து தாமதமாகி உள்ளது.

இது எங்கள் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பதிலளித்துள்ளனர்.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments