சிரஞ்சீவி
தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நாயகனாக நடித்து ரஜினி எப்படி கலக்கி வருகிறாரோ அதேபோல் தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டாராக அசத்துபவர் தான் நடிகர் சிரஞ்சீவி.
40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நாயகனாக நடித்துவரும் இவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
ஒரு சின்ன கேப் பிறகு நடிக்க வந்த சிரஞ்சீவி நடித்த படங்கள் அவ்வளவாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.
சினிமாவை தாண்டி அரசியலிலும் இவர் கலக்கியுள்ளார். கடைசியாக சிரஞ்சீவி நடிப்பில் வெளியான போலோ ஷங்கர் படம் சரியான வரவேற்பு பெறவில்லை,
தற்போது இவர் விஷ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார், படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது.
சொத்து மதிப்பு
கடந்த 2022ம் ஆண்டு நிலவரப்படி சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு ரூ. 1700 கோடி என்று கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் பங்களா, சொகுசு கார்கள், தனி ஜெட் விமானம் என வைத்துள்ளார்.
இவரது மகன் ராம் சரண் சினிமாவில் களமிறங்கி முன்னணி நாயகனாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.