மஞ்சு வாரியர்
மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை மஞ்சு வாரியர்.
நல்ல நல்ல ஹிட் படங்களை கொடுத்த இவர் பீக்கில் இருந்த போதே நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்தார், இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தார். ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர்.
விவாகரத்து பெற்று தனியாக இருக்கும் மஞ்சு வாரியர் மலையாளத்தை தாண்டி தமிழில் கூட அதிக படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.
அதில் அவர் ஒரு பாடலுக்கு ஆடிய நடனம் இப்போதும் டிரெண்டிங்கில் உள்ளது.
டிப்ஸ்
ஆரோக்கியமான சருமத்திற்கு நீரோட்டம் அவசியம் என்பதை மஞ்சு வாரியர் நம்புகிறார். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்து நீரோற்றத்தை பராமரித்து சரும நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த செய்கிறார்.
காலை, இரவு 2 முறை முகத்தை க்ளென்சர் கொண்டு சுத்தப்படுத்துவாராம். இயற்கை பேஸ் மாஸ்க் அப்ளை செய்கிறார். பெரும்பாலும் தேன், தயிர், மஞ்சள், கற்றாழை ஜெல் நிறைந்த பேஸ் மாஸ்க் உபயோகிக்கிறார்.
இப்படி நிறைய இயற்கை விஷயங்களை முகம் பொலிவாக வைத்துக் கொள்ள கடைபிடிக்கிறாராம்.