Monday, February 17, 2025
Homeசினிமா46 வயது வரை திருமணமே வேண்டாம் என இருக்க காரணம் என்ன... ஓபனாக கூறிய கௌசல்யா

46 வயது வரை திருமணமே வேண்டாம் என இருக்க காரணம் என்ன… ஓபனாக கூறிய கௌசல்யா


நடிகை கௌசல்யா

தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்களில் ஒருவர் தான் கௌசல்யா.

கிளாமர் ரூட் பக்கம் செல்லாமல் மிகவும் ஹோம்லியாக நடித்து மக்களின் மனதை வென்றவர் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் வெற்றியால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டார்.

பின் பூவேலி, நேருக்கு நேர், ஜாலி, பிரியமுடன், சொல்லாமலே, உன்னுடன், வானத்தைப் போல, ஜேம்ஸ்பாண்ட், மனதை திருடி விட்டாய் என பல வெற்றிப் படங்கள் கொடுத்தார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் நடித்துள்ளார்.

இப்போது நிறைய துணை கதாபாத்திரங்களில் படங்கள் நடித்து வருகிறார்.


திருமணம்

பிரபலங்களிடம் ரசிகர்கள் அதிகம் கேட்கும் கேள்விகளில் ஒன்று உங்களுக்கு எப்போது திருமணம், 46 வயதாகும் கௌசல்யாவும் இந்த கேள்வியை நிறைய எதிர்க்கொண்டுள்ளார். அப்படி ஒரு பேட்டியில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், சினிமாவில் பிஸியாக இருந்தபோது நான் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன், ஆனால் சில காரணங்களால் அது திருமணத்தில் முடியாமல் போனது.

அதேபோல் இப்போது வரை குடும்பம், குழந்தை என பெரிய பொறுப்பை என்னால் சிறப்பாக கையாள முடியுமா என தெரியவில்லை. இப்போது வரை நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளார். 

46 வயது வரை திருமணமே வேண்டாம் என இருக்க காரணம் என்ன... ஓபனாக கூறிய கௌசல்யா | Actress Kausalya About Why She Dostnt Marry

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments