ஜோதிகா
கோலிவுட்டில் கொண்டாடப்படும் நட்சத்திர காதல் ஜோடி என்றால் அது சூர்யா – ஜோதிகா தான்.
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலமா தமிழ் சினிமாவில்ரீ என்ட்ரி கொடுத்தார்.
அதன்பின் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
டயட்
நடிகை ஜோதிகா பிட்னஸில் அதிகம் ஆர்வம் கொண்டவர், அடிக்கடி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் ஜோதிகா பின்பற்றும் டயட் பிளான் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி,
குறைந்த கலோரி பழங்கள், காய்கறிகளை அவர் உட்கொள்வதாக சொல்லப்படுகிறது. மேலும் வீட்டில் சமைத்த தென்னிந்திய உணவுகளை எடுத்துகொள்ளதாக கூறப்படுகிறது.