வடிவேலு – சிங்கமுத்து
நடிகர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து ஆகிய இருவரும் படங்களில் ஒன்றாக பல ஹிட் காமெடிகளில் நடித்தவர்கள். ஆனால், தற்போது அவர்களுக்கு நடுவில் கருத்து வேறுபாடு காரணமாக மோதல் இருந்து வருகிறது.
நடிகர் சிங்கமுத்து அளிக்கும் பேட்டிகளில் வடிவேலு பற்றி பல்வேறு விஷயங்களை கூறி வருகிறார். இந்நிலையில் வடிவேலு சமீபத்தில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சிங்கமுத்து தன்னை பற்றி துளி கூட உண்மையில்லாத பொய்களை அவதூறாக பேசி வருவதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.
மேலும், எனது பெயரை கெடுக்கும் வகையில் பேட்டி கொடுத்து வரும் சிங்கமுத்து மானநஷ்டமாக ரூ. 5 கோடி வழங்க வேண்டும் என வடிவேலு கேட்டிருக்கிறார்.
சிங்கமுத்து அளித்த பதில்
இது தொடர்பாக, கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிங்கமுத்து பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இது குறித்து நடிகர் சிங்கமுத்து தரப்பில் பதிலளித்துள்ளனர். அதில், “நடிகர் வடிவேலுவின் வெற்றிக்கு பின் நான் தான் காரணமாக இருந்தேன்.
நான் நடிப்பதை தடுக்கும் வகையில் என்னை பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக சித்தரித்தார். அவரை பற்றி பேட்டிகளில் பேச தடை கேட்பதற்கு எந்த உரிமையும் அவருக்கு இல்லை” என்று சிங்கமுத்து தரப்பில் கூறியுள்ளனர்.