லக்கி பாஸ்கர்
நடிகர் துல்கர் சல்மான், மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வர சாக்லெட் பாயாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் என்ற படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியாகி இருந்தது.
சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
தமிழில் அமரன், பிலடி பெக்கர் போன்ற படங்கள் வெளியாகி வசூல் வேட்டை நடத்திவரும் நிலையில் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படத்தின் வசூல் வேட்டைக்கு எந்த குறையும் இல்லை.
படம் வெளியான 5 நாள் முடிவில் ரூ. 58 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.