அகரம் அறக்கட்டளை
12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாக கல்லுரிக்கு செல்லும் மாணவர்களுக்காக பரிசு கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று அகரம் அறக்கட்டளை சென்னையில் நடத்தியது.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார் அவருடைய சிறு வயதில் நடந்த பழைய அழகிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
சிவகுமார் பேச்சு
நான் SSLC படிக்கும்போது 5. 25 ரூபாய் தான் மாதம் ஃபீஸ். அடுத்த வாரம் காசு கேட்டால் அதற்கு இது என்னடா இலவு என்று என் அம்மா கேட்டார். அம்மா காடு கரைக்கு வேலைக்கு சென்றுவிடுவார் எனவும் கூறிருந்தார்.
அன்று பேங்க் எல்லாம் கிடையாது ஒரு மஞ்சள் சட்டிக்குள் காசை துணியில் சுற்றி என் அம்மா வைத்திருப்பார். ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் என் அம்மாவிடம் கை கட்டி கொண்டு நின்றேன். அதற்கு இப்பொழுது என்ன வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு குரூப் போட்டோ எடுக்க காசு வேண்டும் என்றேன். அதற்கு அவர் கொன்று விடுவேன் என்று திட்டினார்.
இதனால் போட்டோவில் நிற்காமல் விட்டுவிட்டேன். இன்று வரை எந்த குரூப் போட்டோ பாத்தாலும் எனக்கு ஆசையாக இருக்கும்.
மேலும், அவர் நான் இங்கு வருவதற்கு முன்பு யோசனை செய்து பார்த்தேன் நான் SSLC முடிக்க 365 ரூபாய் 50 பைசா மட்டும் தான் ஆனாது. ஆனால் இப்பொழுது என் பையன் கார்த்தியின் மகனை Pre kg சேர்த்துவிடுவதற்கு 2.25 லட்சம் ரூபாய் கேட்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.