பிரபல நடிகை
சமீபத்தில் பிரபல நடிகைக்கு திருமணம் என்ற செய்தி வர கொண்டாடிய, வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு இப்போது ஷாக்கிங் தகவல் வந்துள்ளது.
சன் டிவியின் வாணி ராணி சீரியல், திரைப்படங்கள் என சில நடித்துள்ளவர் நடிகை ஜெனிபிரியா. இவரைப் பற்றிய ஒரு சொந்த விஷயம் தான் இப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நின்ற திருமணம்
இவருக்கு சிங்கப்பூரை சேர்ந்த பைலட் துநேசன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பதை அறிந்தே நடிகை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
பெண் வீட்டாரிடம் 200 சவரன் மாப்பிள்ளை வீட்டார் கேட்ட, அவர்களோ 100 போடுவதாக கூறியுள்ளனர்.
அண்மையில் சென்னை வந்த மாப்பிள்ளை வீட்டார் 100 சவரன் நகைகளை இப்போதே கொடுங்கள், திருமண நேரத்தில் கொண்ட வந்தால் கஸ்டம்ஸ் பிரச்சனை வரும் என கூற அவர்கள் முதலில் 50 பவுன் நகைகளை மட்டும் கொடுத்துள்ளனர்.
நகைகளுடன் சிங்கப்பூர் சென்ற மாப்பிள்ளை வீட்டார் திடீரென ஜெனிபிரியாவை சிங்கப்பூர் அழைத்து அவரது பொருள்களை எல்லாம் திருப்பி கொடுத்துள்ளனர்.
நகை பற்றி கேட்டால் நீ நகைகளை எதுவும் கொடுக்கவில்லை என்று கூற நடிகை கடும் ஷாக் ஆகியுள்ளார்.
இப்போது அவரது திருமணமும் நின்றுவிட்டது, நகைகளை திரும்ப பெற ஜெனிபிரியா சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.