ஜுஹி சாவ்லா
இந்தி சினிமாவில் தனது சிறந்த நடிப்பு மூலம் பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர் ஜூஹி சாவ்லா.
தற்போது, 55 வயதை கடந்த ஜூஹி இன்றும் இளம் நடிகைகளுக்கு போட்டி போடும் வகையில் இளமையாகவும், அழகாகவும் காணப்படுகிறார். இவரின் இந்த இளமை தோற்றத்தின் ரகசியத்தை கீழே பார்க்கலாம்.
பியூட்டி டிப்ஸ்
ஜூஹி சாவ்லா உடல் நலனை பாதிக்கும் Junk உணவுகளை எடுத்துக்கொள்வதில்லை. இது அவர் உடல் நலனை காத்து அழகிற்கு வழிவகுக்கிறது.
அதை தொடர்ந்து, அவர் சரும ஆரோக்கியம் கருதி வைட்டமின் ஏ,சி,டி ஈ, ஜிங்க் போன்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை அளவாக எடுத்து கொள்கிறார்.
இவருக்கு உணவு உண்பதை தவிர்க்கும் பழக்கம் கிடையாது.
மேலும், தண்ணீர் மற்றும் பழச்சாறு போன்ற நீர் சத்து அதிகம் உள்ள பொருட்களை எடுத்துக்கொள்கிறார்.
சருமத்தை காக்க போதுமான அளவு உறக்கம் முக்கியம் என்பதால் தினமும் 7 முதல் 8 மணி நேரம் உறங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சூரிய ஒளியில் இருந்து தேகத்தை காக்க சன் ஸ்கிரீன் மற்றும் இயற்கை பொருட்களான தயிர், முல்தானி மெட்டி பயன்படுத்துகிறார். உடல் எடையை பராமரிப்பது அவசியம் என்பதால் உடற்பயற்சி, யோகாசனம் ஆகியவற்றை பின்பற்றி வருகிறார்.