கல்கி 2898 AD
கல்கி 2898 AD திரைப்படத்திற்கு உலகளவில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் வாரத்தின் இறுதியிலேயே உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்திருந்தார். மேலும் உலக நாயகன் கமல் ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மாபெரும் வெற்றியடைந்துள்ள கல்கி 2898 AD திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாகத்தின் 60% சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இன்னும் 40% சதவீத படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளதாகவும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வசூல்
இந்த நிலையில், கல்கி 2898 AD திரைப்படம் வெளிவந்து 6 நாட்களை கடந்துள்ள நிலையில் அதற்கான வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 6 நாட்களில் ரூ. 620 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.