மகாராஜா
கடந்த வாரம் திரைக்கு வந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் மகாராஜா. இப்படத்தை பிரபல இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் அவருடன் இணைந்து முதல் முறையாக பாலிவுட் திரையுலகின் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்திருந்தார்.
மேலும் மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, அபிராமி, பாரதிராஜா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள மகாராஜா திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
வசூல்
அதன்படி, இப்படம் கடந்த 6 நாட்களில் உலகளவில் ரூ. 53 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது விஜய் சேதுபதியின் மாஸ் கம் பேக் ஆக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வாரத்தின் இறுதிக்குள் இன்னும் பல வசூல் சாதனைகளை இப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.