தேவரா
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தேவரா. தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடிக்க கொரட்டாலா சிவா இயக்கியிருந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இது பாலிவுட் நடிகை ஜான்வி கபூரின் முதல் தென்னிந்திய திரைப்படமாகும். முதல் படமே அவருக்கு பெரிய திரைப்படமாக அமைந்தது.
மேலும் இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் 7 நாட்கள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
7 நாள் வசூல்
இந்த நிலையில் 7 நாட்களில் உலகளவில் தேவரா திரைப்படம் ரூ. 405 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் இப்படம் ரூ. 500 கோடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.