வாழை
கடந்த வாரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த திரைப்படங்கள் வாழை மற்றும் கொட்டுக்காளி. இதில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
உண்மை சம்பவத்தை மையகமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் 7 நாட்கள் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
வசூல் விவரம்
அதன்படி, இப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 16 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது வாழை திரைப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தற்போது பட்டையை கிளப்பி வருகிறது.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என இயக்குனர் மாரி செல்வராஜின் வெற்றிப்படங்களின் வரிசையில் தற்போது வாழையும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.