கல்கி 2898 AD
கல்கி 2898 AD திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் சாதனைகளை படைத்துக்கொண்டே இருக்கிறது. பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பாட்னி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
[D2KDTA ]
முதல் பாகம் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டாம் பாகத்திற்கான 60% சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என தயாரிப்பாளர் கூறியிருந்தார்.
வசூல்
இப்படம் இதுவரை ரூ. 70 கோடிக்கும் மேல் லாபம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உலகளவில் ரூ. 866 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர்ஹிட்டாகியுள்ளது என்கின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் அனைவரும் எதிர்பார்க்கும்படி, கல்கி 2898 AD திரைப்படம் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைகிறதா என்று.