Saturday, December 7, 2024
Homeசினிமா73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகர் மம்மூட்டியின் சொத்து மதிப்பு விவரம், இதோ

73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகர் மம்மூட்டியின் சொத்து மதிப்பு விவரம், இதோ


மம்மூட்டி

மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாகவும், ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகராகவும் இருப்பவர் மம்மூட்டி. 72 வயதிலும் இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.


இவர் நடிப்பில் வெளிவந்த Kannur Squad, காதல் தி கோர், பிரமயுகம், டர்போ போன்ற பல தரமான திரைப்படங்களை சமீபத்தில் கொடுத்தார். இவர் சினிமாவிற்கு வந்து கிட்டதட்ட 50 வருடங்களுக்கும் மேல் ஆகியுள்ளது.

மம்மூட்டி நடிப்பில் அடுத்ததாக Bazooka, Kadugannawa Oru Yatra ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அதுமட்டுமின்றி கவுதம் மேனன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று நடிகர் மம்மூட்டியின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் மம்மூட்டியின் சொத்து மதிப்பு குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகர் மம்மூட்டியின் சொத்து மதிப்பு விவரம், இதோ | Actor Mammootty Net Worth Details

சொத்து மதிப்பு

அதன்படி, நடிகர் மம்மூட்டி சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி வெவ்வேறு முதலீடுகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 50 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறாராம்.

இவருக்கு கொச்சியில் சொந்தமாக ரூ. 5 கோடி மதிப்பில் பிரமாண்டமான பங்களா ஒன்று இருக்கிறதாம். மேலும் இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 370 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments