மின்மினி
பூவரசன் பீபீ, சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் ஹலிதா ஷமீம். இவருடைய இயக்கத்தில் உருவாகி அடுத்து வெளிவரவிருக்கும் படம் தான் மின்மினி.
இப்படத்தை 8 ஆண்டுகளாக காத்திருந்து இயக்கி வருகிறார் ஹலிதா ஷமீம்.
நடிகர், நடிகைகளின் சிறு வயது பருவத்தை முதலில் படமாக்கிவிட்டு, பின் 8 ஆண்டுகள் காத்திருந்து இளம் வயது பருவத்தில் அவர்களை நடிக்க வைத்து படமாக்கியுள்ளார்.
இதுவரை இந்திய சினிமாவில் இதுபோன்ற விஷயங்களை முயற்சி செய்யவில்லை. இதுவே முதல் முறையாகும் என சொல்லப்படுகிறது.
இப்படத்தில் மலையாள நடிகை எஸ்தர் அணில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
இந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிவரவிருக்கும் மின்மினி படத்தின் சிறப்பு காட்சி தற்போது திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
முதல் விமர்சனம்
“தரமான புதுமையான ஃபீல் குட் மூவி. இயக்குனர் ஹலிதா ஷமீம் திரைக்கதை மேஜிக் போல் உள்ளது. முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை எஸ்தர் அணில், பிரவீன் கிஷோர் மற்றும் கவுரவ் காளை ஆகிய மூவரின் நடிப்பும் சூப்பர். கதிஜா ரஹ்மான் இசை அருமை. படத்தின் மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தான். அவருடைய விஷுவல்ஸ் வேற லெவல்” என படத்தை பார்த்தவர்கள் தங்களது விமர்சத்தில் மின்மினி படத்தை புகழ்ந்து பேசியுள்ளனர்.
Happened to watch #Minmini in a special screening , A superb fresh feel good film from @halithashameem
A magic screenplay from Halitha mam
Lead role #EstherAnil given soulful performance and most importantly @manojdft ‘s visuals looks topnotch…
Great work from all the other…— Vasu Cinemas (@vasutheatre) August 6, 2024
#Minmini [4/ : A Beautiful Film!
About 3 people whose lives are “connected”
1st Half set in a Boarding school..
2nd half is shot, after actors grew up in real-life 7/8 years..
Is set in Ladakh..
It’s a rewarding film!
The 3 young actors have done very well -…
— Ramesh Bala (@rameshlaus) August 6, 2024
#MinMini (4/5) – Wholesome and heartwarming. A truly FANTASTIC emotional ride dealing with survivor’s guilt and the true meaning of life. @halithashameem has once again delivered a film that arrests us through its characters and makes us feel for them, while longing for their… pic.twitter.com/DuLHjDeavt
— Siddarth Srinivas (@sidhuwrites) August 6, 2024