மெய்யழகன்
கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் மெய்யழகன். 96 பட இயக்குனர் பிரேம் இயக்குமார் இயக்கிய இப்படத்தை சூர்யா – ஜோதிகா தயாரித்திருந்தார்கள்.
96 படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த நிலையில், அதன்படி 6 ஆண்டுகள் கழித்து பிரேம் குமார் இயக்கத்தில் உருவான மெய்யழகன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல்
சிலர் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் கூறி வந்தாலும் கூட, வசூலில் மெய்யழகம் படம் பட்டையை கிளப்பி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 43 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
முதல் நாளில் இருந்த மெய்யழகன் திரைப்படத்திற்கான வசூல் அதிகரித்துக்கொண்டே இருந்த நிலையில், 9 நாட்கள் முடிவில் உலகளவில் ரூ. 43 கோடி வரை வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எந்த அளவிற்கு வசூல் செய்யும் என பொறுத்திருந்து பார்ப்போம்.