Friday, September 20, 2024
Homeசினிமா90களில் டாப் நாயகனாக கலக்கிய நடிகர் வினீத்தை நியாபகம் இருக்கா?... இவ்வளவு பெரிய மகளா?

90களில் டாப் நாயகனாக கலக்கிய நடிகர் வினீத்தை நியாபகம் இருக்கா?… இவ்வளவு பெரிய மகளா?


நடிகர் வினீத்

தமிழ் சினிமாவில் 90களில் டாப் நாயகனாக கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் வினீத்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் என நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்.

ஆவாரம் பூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த நடிகர் வினீத் தனது முதல் படத்திலேயே அனைவரின் மனதையும் வென்றார்.

இதனால் தமிழ்நாட்டின் திரைப்பட நடிகர் சங்கத்தின் சிறந்த புதுமுகம் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

அதன்பின் ஜாதிமல்லி, காதல் தேசம், சிம்ம ராசி, சுயம்வரம், வேதம், பிரியமான தோழி, உளியின் ஓசை என பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

90களில் டாப் நாயகனாக கலக்கிய நடிகர் வினீத்தை நியாபகம் இருக்கா?... இவ்வளவு பெரிய மகளா? | 90S Actor Vineeth Daughter Family Photo Goes Viral


குடும்ப போட்டோ


நடிகர் வினீத் ஒரு சிறந்த நாயகனாக மட்டுமில்லாமல் பரதநாட்டிய கலைஞராக பல பரதநாட்டிய கச்சேரிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர், பரதநாட்டிய கலைஞர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடன இயக்குனர் என பன்முக திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

2004ம் ஆண்டு ப்ரிசில்லா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டவருக்கு ஒரு மகளும் உள்ளார். தற்போது நடிகர் வினீத் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

90களில் டாப் நாயகனாக கலக்கிய நடிகர் வினீத்தை நியாபகம் இருக்கா?... இவ்வளவு பெரிய மகளா? | 90S Actor Vineeth Daughter Family Photo Goes Viral



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments