ஜாக்கி சான்
90ஸ் கிட்ஸ்களுக்கு நிறைய விஷயங்கள் ஸ்பெஷல், அதிலும் மக்கள் கொண்டாடிய நடிகர்கள் பலர் உள்ளார்கள்.
அப்படி ஒரு நடிகர் தான் ஜாக்கி சான், உலகமே கொண்டாடும் பிரபல நடிகராக உள்ளார். ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்து ஹாலிவுட் வரை தனது படங்கள் மூலம் வசூல் கெத்து காட்டி ராஜாவாக வலம் வந்தவர்.
விஜய் டிவியில் அதிரடி திருவிழா மூலமாக தமிழ் மக்களுக்கு பரீட்சயமானார். ஜாக்கி சான் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான தி மித் திரைப்படம் இந்தியாவின் சில இடங்களில் தான் படமாக்கப்பட்டது.
தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார், இப்படி ஜாக்கி சானுக்கும் இந்திய சினிமாவிற்குமான கனெக்ஷன் அதிகம் உள்ளது.
சொத்து மதிப்பு
இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடும் ஜாக்கி சானின் சொத்து மதிப்பு விவரங்கள் வலம் வருகிறது.
நடிப்பை தாண்டி ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பல படங்களை இயக்கி நடித்த ஜாக்கி சான் இதுவரை மொத்தமாக 400 மில்லியன் சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய மதிப்பில் அவரது சொத்து மதிப்பு ரூ. 3300 கோடியாம்.