விஜய்
விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக இருக்கும் பிரபலம்.
இவர் படம் என்றாலே நல்ல வியாபாரம் ஆகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
அண்மையில் விஜய் நடிப்பில் கோட் என்ற அவரது 68வது படம் வெளியானது, ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 400 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான இப்படம் இப்போதும் நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.
நிறைய டேக்
நடிகர் விஜய் சிரிக்க ஆரம்பித்துவிட்டால் அவரை கண்ட்ரோல் செய்வது கஷ்டம்.
அப்படி ப்ரண்ட்ஸ் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு விஷயத்தை அந்த படத்தில் நடித்த ரமேஷ் கண்ணா பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் அவர், ப்ரண்ட்ஸ் படத்தில் கடிகாரம் உடைக்கும் சீன் எடுக்கும் போது விஜய் பயங்கரமா சிரிச்சிட்டாரு, மறுபடி எடுத்தா மறுபடியும் சிரிக்குறாரு. இப்படி 3, 4 தடவை எடுத்தோம், அப்புறம் அவரே நான் திரும்பி நிக்குறேன்னு சொன்னாரு.
அந்த கடிகாரம் சீன்ல அவர் மட்டும் தனியா போய் திரும்பி நின்னு சிரிச்சிட்டு இருந்தாரு, பிறகு தான் அந்த சீன் எடுத்தோம் என கூறியுள்ளார்.