அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
செல்ஃபி வீடியோ
சினிமா ஒரு பக்கம் இருந்தாலும், தனது பேஷன் கார் ரேஸில் மீண்டும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமீபகாலாமாக தொடர்ந்து வெளியாகி கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில், ஷோரூம் ஒன்றில் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட செல்ஃபி வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
#AjithKumar Recent Selfie Video#GoodBadUgly – #VidaaMuyarchi Update Coming 🔜 pic.twitter.com/VozDYS5sq3
— Movie Tamil (@MovieTamil4) September 27, 2024