கோட்
தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் உலகளவில் ரூ. 598 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து வெளிவந்த கோட் படம் லியோ படத்தை விட அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கலவையான விமர்சனங்கள் காரணமாக கோட் படத்தின் வசூல் குறைய துவங்கியது. ஆனாலும் கூட தமிழ்நாட்டில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதே போல் வெளிநாடுகளிலும் கோட் படத்தின் வசூல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
இந்த நிலையில், கோட் படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் ரூ. 430 என தகவல் வெளியாகியுள்ளது. இது எதிர்பார்த்ததை விட குறைவான வசூல் என சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் கோட் படத்தின் இறுதி வசூல் எவ்வளவு இருக்கப்போகிறது என்று.
கோட் படத்தை தொடர்ந்து விஜய் தனது கடைசி படத்தில் நடிக்கவுள்ளார். தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.